COVID-19 தடுப்பூசி திட்டம் தற்போது 45 முதல் 59 வயதுடையவர்களுக்கு துவக்கம்

COVID-19 vaccine Singaproe
(PHOTO: MOH)

சிங்கப்பூரில் 45 முதல் 59 வயதுடையவர்கள் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடியாக பதிவு செய்யலாம்.

அரசாங்கம் தனது தடுப்பூசி திட்டத்தை இளைய வயதினருக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

S$93 மில்லியன் மின்னிலக்க நாணயத்தை பயன்படுத்தி கலைப்படைப்பை வாங்கிய தமிழர்..!

இதனை vaccine.gov.sg என்ற இணையதளத்தில் அவர்கள் பதிவு செய்யலாம், மேலும் அதில் தனிப்பட்ட URL உடன் SMS அனுப்பப்படும்.

முன்னுரிமை அளிக்கப்பட குழுக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, மேலும் தடுப்பூசி திட்டத்தை இளைய வயதினருக்கு விரிவுபடுத்த தற்போது தயாராக உள்ளோம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி சில நாட்களுக்குள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும், அது SMS மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடுப்பூசி விநியோக அட்டவணையில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான நேரம் மாறுபடலாம் மற்றும் அதிக காலம் எடுக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் to திருச்சி, சென்னை, மதுரை – அடுத்த ஏப்ரல் மாதம் பயணிக்க…