“புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே தடுப்பூசி விகிதம் மிகவும் அதிகம்”- நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

TODAY File Photo

சிங்கப்பூரின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு சம்மந்தப்பட்டத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்து வருகின்றன்.

அந்த வகையில் நேற்று (27/07/2021) நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து பேசிய நிதியமைச்சரும், அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங், “புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே (Migrant Workers) தடுப்பூசி விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சமூக அளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக, தங்கும் விடுதிகளை விட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியே சென்றால், அவர்களை வைரஸ் தொற்றி விடக்கூடும் என்ற கவலை இருக்கிறது. ஆனால், தங்குமிடத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே தடுப்பூசி விகிதம் இப்போது மிக அதிகமாக உள்ளது, மேலும் இது அதிகரித்து வருகிறது.

உற்பத்தித் துறையின் வளர்ச்சி தொடர்ந்து 8- வது மாதமாக உயர்வு!

தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான இரண்டு அம்சங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. தொழிலாளர்கள் ஒரு பொழுதுபோக்கு மையத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு மையங்கள் போன்ற வசதிகள் உள்ளன. வாரத்திற்கு மூன்று முறையில் ஒவ்வொரு வருகையிலும் நான்கு மணி நேரம் மட்டுமே அவர்கள் செலவிட வேண்டும். அவர்கள் முன்கூட்டியே மொபைல் பயன்பாடு மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தீவு முழுவதும் எட்டு பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. தொழிலாளர்கள் ஒரு நிலையான பொழுதுபோக்கு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழிலாளர்களின் மன நலனைப் பற்றி நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். அவர்கள் நீண்ட காலமாக இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.” இவ்வாறு அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

எனினும், தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் அவர் கொடுக்கவில்லை. மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது என்பது தொடர்பான புள்ளி விவரத்தையும் அமைச்சர் லாரன்ஸ் வோங் வழங்கவில்லை.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ₹7½ லட்சம் பணம் மோசடி

கடந்த ஜூன் 8- ஆம் தேதி மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “தங்குமிடங்களில் வசிக்கும் 55,000 எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மே 31- ஆம் தேதி வரை முழுமையான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல், 67,000 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.