சிங்கப்பூரில் தேக்கா நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற தொற்று பாதித்த நபர்கள்!

COVID-19 visited tekka centre
(Photos: Reuters/Edgar Su, ION Orchard, Google Street View)

COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

மெரினா பே சாண்ட்ஸ் கேசினோ (Marina Bay Sands Casino) மற்றும் சிங்கப்பூர் முழுவதும் உள்ள சில உணவகங்களை அந்த பட்டியலில் அமைச்சகம் சேர்த்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு பைகள்!

நேற்றைய நிலவரப்படி (நவம்பர் 30), சுமார் பதினாறு இடங்கள் கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பட்டியல்:

  • தேக்கா நிலையம்
  • Ion Orchard
  • The Centerpointஇல் உள்ள The Central
  • Geylang Bahru சந்தை மற்றும் உணவங்காடி
நோயாளிகள் முன்னர் சென்றுவந்த நேரம் மற்றும் இடங்கள்:
(Photo: MOH)
ஆரோக்கியத்தை கவனிக்கவும்

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…