COVID-19: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் பங்களாதேஷ் ஊழியர்; ஆண் குழந்தை பெற்றெடுத்த மனைவி..!

COVID-19: Wife of critically ill Bangladeshi man in Singapore gives birth to baby boy
COVID-19: Wife of critically ill Bangladeshi man in Singapore gives birth to baby boy . (Photo: Migrant Workers Centre)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பங்களாதேஷ் ஊழியரின் மனைவி பங்களாதேஷில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக வெளிநாட்டு தொழிலாளர் மையம் (MWC) செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சம்பவம் 42ஆக பட்டியலிடப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர், பிப்ரவரி 8ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் (CGH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி தீப்பற்றி எரிந்த விபத்தில் ஓட்டுநர் பலி..!

அதை தொடர்ந்து, COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு (NCID) மாற்றப்பட்டார்.

We received the good news from the wife of Case #42 on the arrival of their firstborn yesterday afternoon. Both mother…

Posted by Migrant Workers' Centre on Tuesday, March 31, 2020

முகநூலில் இதுபற்றி MWC குறிப்பிடுகையில், சம்பவம் 42-இன் மனைவி நேற்று பிற்பகல் அவர்களின் முதல் குழந்தை பெற்றெடுத்தார் என்ற நல்ல செய்தி தங்களுக்கு கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 96% நுழைவாயில்களில் ERP சாலை கட்டணங்கள் குறைப்பு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil