தொற்றுநோய்: சிங்கப்பூரில் உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை – MOH அளித்த தகவல்

covid four-year-old-girl-dies-moh
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக 4 வயதுமிக்க பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை (17 ஜூலை) சிறுமி மரணித்ததாக MOH கூறியுள்ளது.

பாசிர் ரிஸ் பார்ம்வேயில் மூடப்படும் மீன் பண்ணை… S$20,000க்கு பதில் S$2,500 – அனைத்தும் தள்ளுபடி விலையில்!

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அந்த சிறுமிக்கு கடந்தகாலத்தில் மருத்துவ பிரச்சனை குறித்த எந்த பதிவும் இல்லை என்றும், முன்பு நலமாக இருந்ததாக MOH பதிலளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிக்கு அறிகுறிகள் தோன்றியதாகவும், பின்னர் ஞாயிற்றுக்கிழமை ART கருவி பயன்படுத்தியதில் COVID-19 தொற்றுநோய் உறுதியானதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் சிறுமிக்கு மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டது, ஆனால் அவருக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமி மயங்கி விழுந்தார்.

இந்த மரணத்திற்கான காரணம் கோவிட்-19 என அரச பரிசோதனை அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டது என அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற ஒரு பகுதி அழுக்கடைந்து காணப்படுவதாக வேதனை தெரிவித்த TikTok பயனர் !