கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!

Covid19 cases new locations
Pic: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தியோங் பாரு பிளாசா, VivoCity கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஐ.நா. குளோபல் காம்பாக்ட் மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ஹலிமா யாக்கோப்!

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

ஜூன் 03: Angel Salon ( 38 Beo Crescent)

ஜூன் 07, 08: தியோங் பாரு பிளாசா

ஜூன் 13: VivoCity கடைத்தொகுதியின் Toys “R” Us கடை

ஜூன் 13: 86 Redhill Close-ல் அமைந்துள்ள Giant Express பேரங்காடி

ஜூன் 07, 08, 09, 11, 12, 13, 14: Tiong Bahru Yong Tao Hu

ஜூன் 11, 12: 166, புக்கிட் மேரா செண்ட்ரல் NTUC Fairprice பேரங்காடி

Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் வருகை அட்டைக்கு அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்!