சிங்கப்பூரில் மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட 3 புதிய நபர்கள் உறுதி..!

COVID-19 பாதித்த மேலும் மூன்று புதிய சம்பவங்களை சனிக்கிழமை (பிப்ரவரி 22) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : போதைப்பொருள் கடத்தல்; சிங்கப்பூரில் 2 மலேசிய பெண்கள் கைது..!

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 89ஆகக் உள்ளது.

இதில் குணமடைந்த நபர்கள், 28 வயது தாய் (சம்பவம் 19) மற்றும் அவரது ஆறு மாத குழந்தை (சம்பவம் 28). அவர்கள் இருவரும் யோங் தாய் ஹேங் மருத்துவ தயாரிப்புகள் கடையுடன் தொடர்புடையவர்கள்.

சிங்கப்பூரில் இதுவரை 49 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 40 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர், மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடையவர். மற்றொருவர் கடந்த பிப். 9ஆம் தேதி வூஹானிலிருந்து சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டவர்.

மூன்றாவது நபரை பொறுத்தவரை, முந்தைய சம்பவங்களுடன் அல்லது சீனா சென்ற சமீபத்திய வரலாறு உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்வதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.