சிங்கப்பூரில் குழந்தை உட்பட இருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதி; மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர்..!

சிங்கப்பூரில் மேலும் ஐந்து COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) திங்கள்கிழமை (பிப்ரவரி 17) தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதில் 14, 15, 31, 48 மற்றும் 65 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர், மொத்தமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 24ஆக உள்ளது.

இதையும் படிங்க : COVID-19 வைரஸ் தொற்று: உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அறிவுரைகள்..!

மேலும் இரண்டு புதிய COVID-19 சம்பவங்கள் திங்களன்று பதிவாகியுள்ளன, இதன் மூலம் சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 77ஆக உள்ளது.

76வது நபர்

ஒரு வயது நிரம்பிய சிங்கப்பூர் குழந்தை, பிப்ரவரி 9 அன்று வூஹானில் இருந்து சிங்கப்பூர் வந்த குழுவில் இந்த குழந்தையும் இருந்துள்ளது.

மேலும், குழந்தையின் நிலை சீராக இருப்பதாகவும், கேகே பெண்கள் மற்றும் சிறார் மருந்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

77வது நபர்

35 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவர் சீனாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை. இவருக்கு, 50வது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட DBS நிறுவனத்தில் பணிபுரியும் 62 வயதான சிங்கப்பூரருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மேலும், திங்கள்கிழமை அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது, தற்போது அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (என்சிஐடி) சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கோரோனா தொற்று சந்தேகம்..!