சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி – சுகாதார அமைச்சகம்..!

சிங்கப்பூரில் மேலும் இரண்டு COVID-19 நோயாளிகள் திங்கள்கிழமை அன்று (பிப்ரவரி 24) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சிங்கப்பூர் ஒரு புதிய COVID-19 சம்பவத்தையும் உறுதி செய்துள்ளது.

இதில் மொத்தம் 53 பேர் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் உள்ள 37 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர். ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் (நபர் 90)

இவர் 75 வயதான சிங்கப்பூர் பெண், சீனாவுக்கு சமீபத்தில் செல்லவில்லை. தி லைஃப் சர்ச் மற்றும் மிஷன்ஸ் சிங்கப்பூருடன் இவருக்கு தொடர்பு உள்ளது. அந்த தேவாலயத்துடன் தொடர்புடைய 7வது நபர் இவர்.

அவர் தற்போது தொற்று நோய் தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குணமடைந்தவர்கள் விவரம்

இரண்டு புதிய நோயாளிகள் அதாவது, சம்பவம் 46 மற்றும் சம்பவம் 87 ஆகியவற்றில் உறுதிசெய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சம்பவம் 46-ல் உறுதிசெய்யப்பட்ட நபர், சிங்கப்பூரில் நிரந்தர குடிமகன். இவர் ஜொகூர் பஹ்ருவில் வசித்து வருகிறார். ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா கேசினோவில் பணிபுரிகிறார்.

சம்பவம் 87-ல் உறுதிசெய்யப்பட்ட நபர், 32 வயதான சிங்கப்பூரர். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வூஹானில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர் இவர்.