சிங்கப்பூரில் கட்டுமான கிரேன் இடிந்து விழுந்ததில் இந்திய தொழிலாளி ஒருவர் பலி..!

1 dead, 1 injured in crane collapse at Novena construction site of new TTSH rehab hub ( Photo : Straits Times)

நோவெனாவில் (Novena) உள்ள ஒரு பணிநிலையத்தில் இன்று திங்கள்கிழமை (நவ. 4) கட்டுமான கிரேன் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி டான் டோக் செங் மருத்துவமனைக்கு (TTSH) கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) காலை 8.50 மணியளவில் ஜலான் டான் டோக் செங்கில்  (Jalan Tan Tock Seng) உள்ள ஒரு கட்டுமான இடத்தில் இந்த விபத்து தொடர்பான அழைப்பை ஏற்றதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 28 வயதான தொழிலாளி சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும், அதன் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும், 35 வயதான தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவு அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபர் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்றும், காயமடைந்த தொழிலாளி பங்களாதேஷ் நாட்டவர் என்றும் மேலும், அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் அந்த இடத்திலுள்ள தொழிலாளர்கள் The Straits Times நிருபர்களிடம் தெரிவித்தனர்.

மொத்தம் 17 இறப்புகளில், ஆறு உயிரிழப்புகள் கட்டுமான இடங்களில் நடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.