சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விரைவு சாலைகளில் அனுமதி கிடையாது!

Photo: LTA Official Facebook Page

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை ஆட்டிப் படைத்தும் வரும் நிலையில், அது நமது அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றியுள்ளது. குறிப்பாக, நமக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். உலகில் பெரும்பாலானவர்கள் தற்போது நாள்தோறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, சைக்கிலிஸ்ட் எனப்படும் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது ஒருவகையான நல்ல உடற்பயிற்சி என்பதால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ஒவ்வொரு நாளும் அதிகாலை ஒரு குறிப்பிட்ட தொலைவை இறுதிச் செய்துவிட்டு, பயணம் மேற்கொள்கின்றன. இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

அதிபர் சவால் அறநிதிக்கு கெப்பல் கிளப் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிதியைத் திரட்டி சாதனை!

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தல், கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகிறார்களா என்றால் கேள்வி குறிதான். ஏனெனில், சிங்கப்பூரில் உள்ள அனைத்து விரைவுச் சாலைகள் மற்றும் சுரங்கச் சாலைகளிலும் கார்கள், சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் வேகம் அதிகமாக இருப்பதால், விபத்துகள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, அவ்விரு சாலைகளிலும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அனுமதி கிடையாது; அனுமதிக்கப்படுவதும் இல்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும்தான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

இருப்பினும், சைக்கிள் ஓட்டுபவர்களில் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி விரைவுச் சாலைகளில் செல்கின்றன. அவர்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையினர், மீண்டும் இதுபோல் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கின்றன.

சிங்கப்பூரில் தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழப்பு

போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், நாள்தோறும் அதிகாலை ரோந்து சென்று போக்குவரத்து விதிகளை மீறும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சைக்கிள் ஓட்டுபவர்கள் முறையான விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆண்ட்ராய்டு தொலைபேசியில் கூகுள் மேப்ஸ் (Google Maps) நேவிகேஷன் செட்டிங்கில் (Navigation Settings) விரைவு சாலையைத் தவிர்க்க (Avoid Expressways) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு பாதை விருப்பங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். மோட்டார் பாதைகளைத் தவிர்க்கவும் (Avoid Motorways) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

சாலைகளில் நிகழும் போக்குவரத்து விபத்துகள் அதிகரித்தும் வரும் சூழலில், சைக்கிள் ஓட்டுபவர்கள் முறையான சாலை போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து பயண மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.