சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி!

Dante Chen sg wwe
Photo: WWE

Sean Tan – சீன் டான் (வயது 25) உலக மல்யுத்த பொழுதுபோக்கில் (WWE) கலந்துகொண்ட முதல் சிங்கப்பூர் மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவரின் WWE மேடை பெயர் டான்டே சென் (Dante Chen), வாராந்திர WWE NXT 2.0 நிகழ்ச்சியில் அறிமுகமானார்.

சாங்கி விமான நிலைய கட்டமைப்பில் மோதிய SBS பேருந்து… மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

அவரின் எதிர் போட்டியாளர், ட்ரே பாக்ஸ்டர் (Trey Baxter) வளையத்திற்குள் நுழைந்த பிறகு, ரிங் அறிவிப்பாளர் செனை அறிமுகப்படுத்தி கூறினார்.

“சிங்கப்பூரைச் சேர்ந்த எதிர் ஆட்டக்காரர், 215 பவுண்டுகள் எடையுள்ள டான்டே சென்” என்று அறிமுகப்படுத்தும்போது, சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அது அமைந்தது.

Photo: WWE

போட்டி சரியாக 1 நிமிடம் நீடித்தது, அதில் சிங்கப்பூர் வீரர் சென் அசத்தல் வெற்றி பெற்றார்.

“மனைவியை காணொளி எடுத்து மிரட்டி தவறான தொழிலுக்கு அழைத்த கொடூரம்” – சிங்கப்பூரில் பணிபுரிந்த கணவன் மீது புகார்