ஹாங்காங் DBS வங்கியில் சிங்கப்பூர் பிரதமரை இழிவுபடுத்தி எழுதப்பட்டதால் சர்ச்சை!

DBS branch in Hong Kong vandalised with graffiti slamming PM Lee and Singapore ruling party.

சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பீப்பிள்ஸ் ஆக்சன் பார்ட்டி (பிஏபி) மற்றும் பிரதமர் லீ ஹ்சியன் லூங் ஆகியோரை அவதூறாகக் கண்ணாடி வெளிப்புறத்தில் இழிவுபடுத்தும் வகையில் கிறுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சேதப்படுத்தப்பட்ட டிபிஎஸ் வங்கிக் கிளையின் புகைப்படங்கள் நேற்று (நவம்பர் 14) காலை ‘கன்சர்ண்ட் சிட்டிசன்ஸ் பேண்ட் டுகெதர் ஃபார் எ பெட்டர் சிங்கப்பூர்’ எனும் ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்டது.

இதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த கிறுக்கல் சுத்தம் செய்யப்பட்டதாக டிபிஎஸ் செய்தித் தொடர்பாளர் மதர்ஷிப்பிடம் தெரிவித்தார்.

1968 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

டிபிஎஸ் ஹாங்காங்கில் 34 கிளைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் பேசிய பிரதமர் லீ, ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பற்றிக் குறிப்பிட்டார், இது ஹாங்காங் மக்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆகையால் இது கூட காரணமாக அமையலாம் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.