சிங்கப்பூரின் DBS வங்கி இந்தியாவில் தனது புதிய 50 கிளைகளை திறக்கவுள்ளது..!

DBS branch in Hong Kong vandalised with graffiti slamming PM Lee and Singapore ruling party.

சிங்கப்பூரில் மிக புகழ்பெற்ற வங்கிகளில் முதலாவது DBS வங்கி. சிங்கப்பூரர்கள் 90 சதவீதத்திற்கு மேலானோர் இந்த வங்கி சேவையை தான் தேர்வு செய்து தங்கள் பண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் 50 கிளைகளை திறக்க DBS சமீபத்தில் அனுமதி பெற்றது. அதற்கான ஒழுங்குமுறை நடைமுறைகள் தற்போது நடந்து வருவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் அரசு DBS நிறுவனத்திற்காக YES வங்கியில் 51% பங்குகளை வாங்க, PMO மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

நாட்டின் தொழிற்துறை நிதிச் சேவைகளைக் கையாளுவதற்காக சிங்கப்பூர் அரசால் 1968-ல் இவ்வங்கி உருவாக்கப்பட்டது. இன்று 100-க்கும் மேலான கிளைகளுடன் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி இது.

மேலும், பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்ச்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே வங்கி. இவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான ATM இயந்திரங்களைக் கொண்டுள்ளது.