உலக அளவில் மரண தண்டனை அதிகம் விதிக்கும் நாடு எது..?

உலகளவில், மரணதண்டனைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, கடந்த ஆண்டு ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்து உள்ளதாக மனித உரிமைகள் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் முறையே 45 மற்றும் 58 என்ற விகிதத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு பெரும்பாலான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, பெரும்பான்மையான மரணதண்டனைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு உத்தரபிரதேசம் 354 பேரை தூக்கிலிட்டுள்ளது, அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் 90 பேர் அரியானாவும், 73 பேரை மத்தியப் பிரதேசமும் தூக்கிலிட்டு உள்ளது.

2018ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட அனைத்து மரணதண்டனைகளிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம், ஈராக் ஆகிய நான்கு நாடுகளில் நடந்தது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 2017 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மரணதண்டனைகளின் எண்ணிக்கையில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது பெரும்பாலும் வியட்னாமில் இருந்து வந்த புள்ளி விவரங்களாகும். ஜப்பான் 15 பேரையும், பாகிஸ்தானில் குறைந்தது 14 பேரையும், சிங்கப்பூர் 13 பேரையும் தூக்கிலிட்டது.

அமெரிக்காவில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, முந்தைய ஆண்டை விட சற்றே அதிகமான மரணதண்டனைகள் இருந்தன.

2018 ஆம் ஆண்டில் அறியப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கை பாகிஸ்தானில் இருந்தது. 4,864-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழக்குகள் உள்ளன.

வங்காளதேசத்தில் மரண தண்டனைக்கு 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது.

தகவல் : தமிழக ஊடகங்கள்