கார் ஒர்க் ஷாப் குறித்து அவதூறு வெளியிட்ட ஆடவர்: S$51,000க்கும் அதிகமான தொகை செலுத்த உத்தரவு

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவருக்கு S$51,000க்கும் அதிகமான தொகை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, கார் ஒர்க் ஷாப் குறித்து அவதூறு வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2023ம் ஆண்டு 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – MOM அறிவிப்பு

கார் பேட்டரிக்கான உத்தரவாத காலம் முடியாத நிலையில், அதைச் சரிபார்த்து கொடுக்க தன்னிடம் அந்த கார் ஒர்க் ஷாப் கட்டணம் கேட்பதாக அவர் 3 ஃபேஸ்புக் குழுக்களில் பதிவு செய்தார்.

இந்நிலையில், On Site Car Accessories.SG என்ற ஒர்க் ஷாப் குறித்து அவதூறு தெரிவித்ததாக ஜெர்ரி டாங் முன் வா என்ற அந்த ஆடவருக்கு இந்த தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.

அந்நிறுவனத்துக்கு இழப்பீடாக S$20,000 செலுத்தவும், மேலும் சட்ட செலவு தொடர்பாக S$24,000 செலுத்தவும், கூடுதலாக கைச்செலவு S$7,000க்கும் மேற்பட்ட தொகையை செலுத்த அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சோவா சூ காங்கில் கடும் விபத்து: 28 வயது ஆடவர் பலி – போதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது