சிங்கப்பூரில் தமிழ் மொழியிலும் இனி கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

Dialogue series Tamil Desmond Lee
(PHOTO: Deccan Chronicle)

சிங்கப்பூரில் ஆங்கிலத்தில் மட்டும் நடந்து வந்த கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சி ஒன்று, இனி தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக இணைந்து வலி­மை­யு­டன் மீண்டெழும் கலந்துரையாடல் தொடர் நிகழ்வு விரைவில் தமிழ் மொழியிலும் நடத்­தப்­பட உள்­ளது. அதுமட்டுமல்லாமல், மாண்டரின், மலாய் ஆகிய மொழிகளிலும் அந்த தொடர் நடைபெற உள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் MRT பாதைகளில் ஓடும் 40 பழைய ரயில்கள் மாற்றம்..!

அதோடு கூடுதலாக உடற்குறைபாடு உள்ள நபர்களும் அதில் பங்கேற்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோரிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், மேலும் அந்த கருத்துக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள், மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் நம்பிக்கையையும் திட்டங்களையும் இதில் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வு, அனை­வ­ரை­யும் உள்ளடக்கி அமையும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

அவை மெய்நிகர் அமர்வுகள் மற்றும் ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 17 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட வலி­மை­யு­டன் மீண்­டெ­ழு­வ­தற்­கான பணிக்­குழு கடந்த மே மாதம் உருவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வீட்டிற்கு வெளியே தேசியக் கொடியைக் கட்டியுள்ளவர்கள் கவனத்திற்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…