வருடத்திற்கு 11 ஊதியம் பெறும் பொது விடுமுறைகள் அனைத்து ஊழியர்களுக்கும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா??

Did You Know all employees are entitled to 11 paid public holidays a year in accordance with the Employment Act? (Photo: MOM)

வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி ஒரு வருடத்திற்கு 11 ஊதியம் பெறும் பொது விடுமுறைகள் (Paid Public Holidays) அனைத்து ஊழியர்களுக்கும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், சாலி என்ற பெண் சிங்கப்பூர் தேசிய தின விடுமுறை நாள் அன்று தனது நிறுவனத்தில் விற்பனை உதவியாளராக வேலை செய்ய தேவைப்பட்டார். விடுமுறை நாளில் வேலை செய்வதற்காக அவருக்கு கூடுதல் நாள் சம்பளம் வழங்கப்பட்டது. சாலிக்கு தனது வேலைவாய்ப்பு உரிமைகள் பற்றி நன்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூரின் பொது விடுமுறைகள் தினமான, புத்தாண்டு தினம், சீன புத்தாண்டு (இரண்டு நாட்கள்), புனித வெள்ளி, தொழிலாளர் தினம், Vesak தினம், தேசிய தினம், ஹரி ராய பூசா, ஹரி ராயா ஹாஜி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் தினம் ஆகியவை அடங்கும்.

பொது விடுமுறை தினங்களில் நீங்கள் வேலை செய்து சம்பளம் பெறாமல் இருக்கலாம். உங்கள் உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சிங்கப்பூர் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான உரிமையை வழங்கியுள்ளது. இது குறித்து உங்கள் முதலாளியுடன் கலந்துரையாடல் செய்யுங்கள்.

சிங்கப்பூர் அரசு வழங்கியுள்ள பொது விடுமுறைகளை பற்றி அறிய MOM அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.

மேலும், இந்த வேலைவாய்ப்பு சட்டம் பற்றிய கூடுதல் தகவல் அறிய 1800 221 9922 தொலைபேசி எண்ணை அழையுங்கள்.

சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதள முகவரி: http://www.mom.gov.sg/workright