உணவகங்களில் மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அகற்ற அனுமதி இல்லை – MOH..!

Diners to remove masks only while eating or drinking: MOH
Diners to remove masks only while eating or drinking: MOH (Photo: Mothership)

உணவகத்தில் முழு நேரமும் முகக்கவசத்தை நீக்காமல், சாப்பிடும்போது அல்லது பானம் குடிக்கும்போது மட்டுமே முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (ஜூன் 24) தெரிவித்துள்ளது.

ஊடக கேள்விகளுக்கு பதிலளித்த MOH, கடுமையான செயல்களைச் செய்யும்போது அல்லது சாப்பிடும்போது அல்லது பானம் குடிக்கும்போது தவிர, COVID-19 பரவுவதைத் தடுக்க எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு..!

முகக்கவசம் அணியாதபோது, ​​நீர்த்துளிகள் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க தனிநபர்கள் பேசுவதையோ அல்லது பாடுவதையோ குறைக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடுமையான செயல்பாடு அல்லது உணவை முடித்த உடனேயே முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அகற்ற அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழ் எழுத்துப் பிழைகள் கொண்ட பதாகை நீக்கம் : சிங்கப்பூர் காவல்துறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg