உணவு, பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிட ஜூலை 22 முதல் அனுமதி இல்லை

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் உணவு, பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிட நாளை மறுநாள் முதல் (ஜூலை 22) அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் உணவருந்த அனுமதிக்கும் உணவு, பான கடைகளும் அடங்கும்.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவம்: மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? – அமைச்சர் விளக்கம்

சமூக அளவில் கிருமி பரவும் அபாயங்களையும் கட்டுப்படுத்த முகக்கவசங்களை அகற்ற அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளும் திரும்ப பெறப்படுகிறது.

அதாவது உட்புற உடற்பயிற்சி வகுப்புகள் அல்லது தனிநபர் மற்றும் குழு உட்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகள் போன்ற செயல்களும் நிறுத்தப்படும்.

விரைவில் அனைத்து உணவு, பான நிலையங்களிலும், உணவு வாங்கிச்செல்லுதல் மற்றும் டெலிவரி மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நேற்று (ஜூலை 20) அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்தது.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் 13 வயது சிறுவன் மரணம் – 16 வயது மாணவர் மீது கொலை குற்றச்சாட்டு