தீபாவளியையொட்டி, கடை வீதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சிங்கப்பூர் அரசு நடவடிக்கை!

Photo: LISHA

வரும் நவம்பர் 4- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான கொண்டாடட்டங்கள் லிட்டில் இந்தியா கடை வீதிகளில் முன்கூட்டியே தொடங்கியது. சாலைகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் லிட்டில் இந்தியா கடை வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை லிட்டில் இந்தியாவின் கடை உரிமையாளர்களின் கூட்டமைப்பான ‘Lisha’ ஏற்பாடு செய்துள்ளது. மேலும், நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்டோர் புதிய ஆடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது, சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் நிலையில், லிட்டில் இந்தியா பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசின் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் கூறியதாவது, “தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியா உட்பட சிங்கப்பூரின் முக்கிய கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, இந்த ஆண்டும் இரவு நேரங்களில் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் கடைகளைக் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த விரிவான தகவல்!

அதேபோல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன. மேலும், இந்த பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் தங்கள் குடும்பத்தினருடன் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.