‘தீபாவளியை முன்னிட்டு, இந்திய பொருட்கள் அனைத்தும் இந்திய விலைக்கே’- மைஇந்தியா நிறுவனம் அறிவிப்பு!

MyIndia.sg

வரும் நவம்பர் 4- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் கடை வீதிகளில் படையெடுத்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடை வீதிகளுக்கு சென்று புத்தாடைகள், பட்டாசுகள், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் விற்பனை அமோக நடைபெற்று வருவது கடை உரிமையாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

மேலும், சிங்கப்பூரில் உள்ள முக்கிய சாலைகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது என்றே கூறலாம். தற்போது கொரோனா பரவல் அதிகரித்திருந்த போதிலும், பொதுமக்கள் அரசின் முறையாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், ‘மைஇந்தியா’ என்ற ஆன்லைன் நிறுவனம் மளிகை, காய்கறி முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தீபாவளியையொட்டி பல்வேறு அதிரடி ஆஃப்பர்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்திய பொருட்கள் அனைத்தும் இந்திய விலைக்கே விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற பொருட்களுக்கு 30% -க்கும் அதிகமான தள்ளுபடி இந்நிறுவனம் வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் https://myindia.sg/ என்ற ‘மைஇந்தியா’ (MyIndia.sg) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். 60 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். குறைந்தபட்சம் 30 சிங்கப்பூர் டாலருக்கு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, செல்ஃப் கலெக்சன் (Self Collection) வசதியும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘Clearance Sales’ மூலம் முன்னணி நிறுவனங்களின் பிஸ்கட்கள், ஊறுகாய்கள், மிளகாய் தூள், ஹார்லிக்ஸ், காப்பி தூள், டீ தூள் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ‘மைஇந்தியா’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, பல்வேறு மாவட்டங்களில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியிருந்தது மைஇந்தியா அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து யூ-டியூப் வலைத்தளத்திற்கு சென்று My India Charity என்று குறிப்பிட்டு, வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.