திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிங்கப்பூர் வருகை!

DMK's MP Kanimozhi in Singapore

தஞ்சாவூர் மாவட்டம் ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த கோவிந்தசாமி அவர்கள் மனைவி மற்றும் சிங்கப்பூர் அரவிந்தன்.ஜி அவர்களின் தாயார், சுசிலா கோவிந்தராஜ் (74) அவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பன் நகரில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, இறுதி சடங்கிற்காக அவரது உடல் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று இரவு சிங்கப்பூர் வந்தடைந்தது. சனிக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு மண்டாய் தகனசாலை ஹால் 1 க்கு எடுத்துச் சென்று ஐந்து மணிக்கு முறைப்படி தகனம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்த, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,
சிங்கப்பூர் ஜி. அரவிந்தனின் மனைவியுமான திருமதி க. கனிமொழி அவர்கள் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.

மேலும், இறுதி மரியாதை செலுத்த பேராசிரியர் சுப.திண்ணப்பன், மா.அன்பழகன், ஏபி.இராமன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வருகை புரிந்தனர்.