வெளிநாட்டு பணியாளர்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியம்; புதிய ஏற்பாடு கண்டிப்பாக பயன்தரும்!

(Photo: Reuters)

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அவர்களது முதலாளிகளுக்கு உதவும் வகையில் தற்போது சிங்கப்பூரில் ஒரு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

CDEConnect என்ற அந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கான நிலையம் (CDE), அவர்களுக்கு வேலைப் பிரச்சினை தொடர்பாக உதவி அல்லது ஆலோசனையை வழங்கும்.

“உயிர் போனா திரும்பி வருமா?” – மனைவியுடன் சண்டை… கோபத்தில் காரில் இருந்து குதித்த கணவன்!

தெம்பனீஸ் சந்திப்பில் உள்ள அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள CDECconnect நிலையம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

CDE என்பது தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முன்முயற்சியாகும், பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கான இடமாக இந்த CDE நிலையம் இருக்கும்.

விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் கைவினைப் பட்டறைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அங்கு இடம் பெறும்.

வார இறுதிகளில் அதன் மூலம் பணியாளர்கள் ஓய்வெடுக்கவும், புத்துணர்வு பெறவும் முடியும்.

சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை 12 நாட்களாக காணவில்லை; உதவுங்கள் வாசகர்களே!