சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்ப அனுமதி..!!

Domitary workers are allowed to return to work. (photo : Bloomberg)

சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப கட்டங்கட்டமாக அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளுக்குச் சில தடவை தங்கள் சுகாதார நிலையை குறித்து கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் (BCA) சனிக்கிழமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, 250 திட்டங்களின் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை பாதுகாப்பாக மீண்டும் தொடங்க பரிசீலனை நடந்து வருவதாக BCA குறிப்பிட்டுள்ளது.