துவாஸ் விபத்தில் உயிரிழந்த தமிழர் உட்பட அனைவருக்கும் நன்கொடை பகிர்ந்தளிப்பு

Tuas explosion
(Photo: MWC/Facebook)

துவாஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இணையம் வழி திரட்டப்பட்ட S$608,302 பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கிவ்.ஆசியா என்ற இணையத்தளம் வாயிலாக இட்ஸ்ட்ரைனிங்ரெயின்ரெயின்கோட்ஸ் (ஐஆர்ஆர்) என்ற சேவை அமைப்பு இந்த நன்கொடைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விமானங்களை விற்றும், குத்தகைக்கு விட்டும் நிதி ஈட்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்

அதன்படி அவர்கள் நிர்ணயித்திருந்த S$300,000 மார்ச் 3ஆம் தேதி திரட்டப்பட்ட நிலையில், நன்கொடையாய் சேர்த்த பணம் மொத்தமும் கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட எட்டு ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, துவாஸ் அவன்யூ 11இல் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்தில், இந்தியாவை சேர்த்த மாரிமுத்து, வங்காளதேசத்தை சேர்த்த சொஹைல் எம்டி, அனி சுஸமான் முகமத் ஆகிய மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர், இதில் காயம் அடைந்த ஐந்து பேரில் மூவர் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அந்த மூவரில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இருவர் ஓர் அளவு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் நன்கு குணமடையும் வரை பணிக்கு திரும்ப இயலாது என அந்த தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்வு தற்காலிக நிறுத்தம்