COVID-19: ஊழியர்களுக்கு உதவவும், தேவையான அனைத்து முயற்சிகளையும் முதலாளிகள் மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ..!

Don’t 'drop workers': Companies and workers should take the long view, says PM Lee in May Day message
Don’t 'drop workers': Companies and workers should take the long view, says PM Lee in May Day message (PHOTO: MINISTRY OF COMMUNICATIONS & INFORMATION)

முதலாளிகள் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இந்த கடினமான COVID-19 சூழலில் அவர்களுக்கு உதவவும், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும் வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மே 1 அன்று தொழிலாளர் தினத்திற்கு முன்னதாக நிகழ்த்திய உரையில் திரு லீ, பிரச்சினையின் முதல் அறிகுறி ஏற்படும் போதே முதலாளிகள் தங்கள் ஊழியர்களை கைவிடக்கூடாது என்று கூறினார்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில், ஊழியர்கள் அந்த தயவை தங்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள், விசுவாசமாக சேவை செய்வார்கள் மற்றும் அவர்களின் வர்த்தகங்களின் செயல்பாடுகளைத் தொடரவும் உதவுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பொருளாதாரம் வழக்கமான நிலைக்குத் திரும்பும் போது, ​​நிறுவனங்கள் மீண்டும் தன்னை கட்டியெழுப்ப சிறந்த நிலையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவரும் தொலைநோக்கு பார்வையை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழியர்கள், தொழில்களைத் தொடர ஊதியங்களில் ஏற்படும் தியாகத்தை ஏற்க வேண்டும், முதலாளிகள் தங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இந்த கடினமான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக திரு லீ கேட்டுக்கொண்டார்.