வாட்ஸ்அப் மூலம் ஊடுருவும் மோசடி கும்பல் – SPF எச்சரிக்கை விடுத்துள்ளது.!

Don't give your WhatsApp verification code to anyone if you don't want to lose access to your account: Police

உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுண்டை நீங்கள் தொலைக்க வேண்டாம் என்று விரும்பினால், உங்கள் வாட்ஸ்அப் வெரிபிகேஷன் எண்ணை யாரிடமும் தரவேண்டாம் என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. மேலும், போலியாக நடித்து உங்களுடைய வாட்ஸப் அக்கவுண்டை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) எச்சரிக்கை செய்துள்ளது.

இதுபோன்ற போலியான மோசடிகள் பொதுவாக முதலில் ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலம் ஆரம்பம் ஆகின்றன. அந்த செய்தியில் மோசடி கும்பல் 6 இலக்க வெரிஃபிகேஷன் எண்ணை அவர்களுடைய அலைபேசிக்கு அனுப்பும் படி கூறுகின்றனர்.

ஒரு வேளை நீங்கள் தவறுதலாக அந்த ஆறு இலக்க எண்ணை அனுப்பினாள், அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய வாட்ஸப் அக்கவுண்டை இழக்க நேரிடும்.

இதுபோன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தங்களுடைய பாதுகாத்துக்கொள்ள SPF சில குறிப்புகளை கூறியுள்ளது. அதில் மிக முக்கிய ஒன்றான உங்களுடைய ஆறு இலக்க வெரிஃபிகேஷன் கோடை யாருக்கும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் போன்று உங்களுக்கு மெசேஜ் வந்தாலும் கண்டிப்பாக பகிர வேண்டாம் என்று கூறியுள்ளது.