உங்கள் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – SPF எச்சரிக்கை!

The Police would like to remind all passengers that the transit areas of Changi Airport are gazetted as Protected Places. Passengers who enter the transit areas with a boarding pass should only be there for the purpose of travelling to their next destinations

உங்கள் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று SPF எச்சரிக்கை செய்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று, விமான நிலைய போக்குவரத்து பகுதியில் தனது போர்டிங் பாஸை தவறாக பயன்படுத்தி நுழைந்த 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் தனது மனைவியை வழி அனுப்புவதற்காக போக்குவரத்து பகுதிக்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது. அவர் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் எண்ணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று கடந்த ஜனவரி 2019 முதல் போர்டிங் பாஸ் தவறாக பயன்படுத்திய 33 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்து பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது, என்பதை அனைத்து பயணிகளுக்கும் SPF நினைவூட்டுகிறது.

போர்டிங் பாஸுடன் போக்குவரத்து பகுதிகளுக்குள் நுழையும் பயணிகள், பயணிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும். பயணிக்க விருப்பமில்லாமல், போக்குவரத்து பகுதிகளுக்குள் நுழைய தங்கள் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்துதல், உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதுபோன்று போர்டிங் பாஸ் -ஐ தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம். மேலும் $ 20,000 க்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடங்களுக்கு மிகாமல் சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டுமே விதிக்கப்படும், என்று SPF எச்சரிக்கை செய்துள்ளது.