சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியரின் விவரம்!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் நேற்று புதிதாக தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்டவர், 31 வயதான பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்.

இவர் Chng Woodworkingல் டெலிவரி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய காற்றின் தரம்!

கிரான்ஜி வேவில் (Kranji Way) உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அவர் வசித்து வருகிறார்.

அவர் பொருட்களை ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகளை செய்து வருகிறார். மேலும், அவர் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இந்த ஊழியர் முன்பு பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டார்.

மேலும், அவர் கடந்த பிப்ரவரி 23 முதல் பிரத்யேக வசதியில் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 26 அன்று அவருக்கு COVID-19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.

வாம்போவில் உள்ள பிளாட்டில் தீ விபத்து – 3 குழந்தைகளை உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!