சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவரின் விவரம்!

(Photo: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் நேற்று உள்ளூர் அளவில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு தங்கும் விடுதியில் COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக பிப்ரவரி 10 அன்று ஊழியருக்கு தொற்றுநோய் கண்டறியப்பட்டது.

ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது ஆடவர் கைது

அவர் 35 வயதான பங்களாதேஷ் நாட்டவர், அவர் Chng Woodworking-ல் டெலிவரி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும், அவர் கிரான்ஜி வேவில் (Kranji Way) அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கிறார்.

பொருட்களை ஏற்றுவது இறக்குவது மட்டுமே அவரின் வேலை என்றும், மேலும் அவர் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவரின் நெருங்கிய தொடர்புகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 88 பேர் மீது விசாரணை