சாலையில் லாரியை கவனமாக ஓட்டினால் பல்வேறு விபத்துகளை தவிர்க்கலாம் – காணொளி

Stomp

டன்அர்ன் சாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (அக்டோபர் 16) சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை லாரி பக்கவாட்டில் அணைக்கும் காணொளி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் ROADS.sg -இன் Facebook மற்றும் YouTube பக்கங்களில் பகிரப்பட்டது.

காதலியின் தாய்க்கு சொந்தமான கிரெடிட் கார்டை பயன்படுத்தி S$8,000 செலவு செய்த ஆடவர் – நன்னடத்தை கண்காணிப்பு

காணொளியில், இரண்டு சைக்கிள் ஓட்டிகள் தங்கள் சைக்கிளில் சாலை ஓரத்தில் பயணம் செய்வதைக் காணலாம்.

லாரி டிரைவர் சமிக்ஞை செய்யாமல், ரைபிள் ரேஞ்ச் (Rifle Range) சாலையில் இடதுபுறம் திரும்புவதற்கு முன் Blind spotஐ சரிபார்க்காமல் திரும்புகிறார்.

அதனை அடுத்து,சைக்கிள் ஓட்டி ஒருவர் மீது லாரி பக்கவாட்டில் அணைப்பதையும், மற்றொருவர் விரக்தியுடன் வாகனத்தை தட்டுவதையும் காணொளியில் காண முடிகிறது.

“இந்த சம்பவம் மிகவும் மோசமாக விபத்தாக மாறியிருக்கலாம், நீங்கள் எந்த சாலை பயனராக இருந்தாலும் பரவாயில்லை, ஒருவருக்கொருவர் கருணையுடன் இருக்க முயற்சிப்போம் ” என அந்த காணொளி தலைப்பில் கூறப்பட்டு இருந்தது.

கிட்டத்தட்ட 700 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – Giant அதிரடி