சிங்கப்பூரில் கனமழையை தொடர்ந்து… அடுத்த 2 வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

singapore
(Photo: Unsplash)

சிங்கப்பூரில் மழை மற்றும் குளிர்ச்சியான ஆண்டு தொடக்கத்தைத் தொடர்ந்து, இந்த ஜனவரி இரண்டாம் பாதி பொதுவாக வறட்சியாகவும், சூடாகவும் இருக்கும்.

வெப்பநிலையானது, சில நாட்களில் சுமார் 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் (MSS) தெரிவித்துள்ளது.

நிற்காமல் சென்ற கார்.. துரத்தி பிடித்த காவல்துறை – உரிமம் இல்லாத ஓட்டுநர் கைது!

மேலும், இந்த பதினைந்து நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை, பெரும்பாலான நாள்களில் 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய அளவு அல்லது மழை இல்லாத நாட்களில், தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஐந்தில் இரு ஊழியர்களுக்கு வேலையிட பாலியல் தொல்லை – ஆய்வு

சில நாட்களின் பிற்பகலில் தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய குறுகிய நேர மழை பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது என MSS தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இரண்டாவது பாதியில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் 89 சந்தேக நபர்கள் கைது

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…