சிங்கப்பூரில் இனி பொது நடைபாதைகளில் இ-ஸ்கூட்டர்கள் இயக்குவதற்கு தடை; மீறினால் அபராதம் மற்றும் சிறை.!!

E-scooters to be banned from Singapore's footpaths starting Nov 5

சிங்கப்பூரில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) முதல் பொது நடைபாதையில் மின்சார ஸ்கூட்டர்கள் இயக்குவது தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுவோருக்கு S$ 2,000 வரை அபராதமும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அடுத்த ஆண்டு முதல் மிக கடுமையாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சைக்கிள் பாதைகள் மற்றும் பூங்கா இணைப்பு நெட்வொர்க்குகளில் இதுபோன்ற சாதனங்களின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு டிசம்பர் 31 வரை நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது, இதன் போது தவறான முறையில் இயக்கும் மின்சார ஸ்கூட்டர்களின் பயனர்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்படும். கூடுதலாக இ-ஸ்கூட்டர் ரைடர்ஸ் தங்களை சரிசெய்து கொள்ள இந்த காலஅவகாசம் வழங்கப்படுகிறது.

மோட்டார் சக்கர நாற்காலிகள் அல்லது மொபிலிட்டி ஸ்கூட்டர்கள் அல்லது தனிப்பட்ட இயக்க சாதனங்களுக்கு (Personal mobility aids), இந்த தடை பொருந்தாது என்று டாக்டர் லாம் கூறியுள்ளார்.