ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட ஆடவர் உயிரிழப்பு

Spring Yang Chunzi/Google

சிங்கப்பூரில் 47 வயதான ஆடவர் ஒருவர் கடலில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சனிக்கிழமை (நவம்பர் 6) இரவு 11 மணியளவில் Enak Enak ஹாங்காங் டீ ஹவுஸுக்கு அருகிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில்  நிகழ்ந்ததாக சீன நாளிதழ் லியான்ஹே வான்பாவோ தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் கைமுறை முத்திரைகள் படிப்படியாக நிறுத்தப்படும் – ICA

அந்த ஆடவர் தனது மீன்பிடி உபகரணங்களை பேக்கிங் செய்து கொண்டிருந்த போது கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை பார்த்த மூன்று மீன் பிடிப்பவர்கள், ஆடவரை கரைக்கு இழுக்க தண்ணீரில் குதித்தனர்.

சம்பவ இடத்தில் சலலப்பு ஏற்பட்டதை கண்ட ஒருவர் அங்கு சென்றார், அப்போது புல் மீது மயக்க நிலையில் கிடந்த அந்த ஆடவரை அவர் கண்டார்.

மேலும் அவரை உயிர்ப்பிக்க பலர் முயன்றும் அது பலனில்லாமல் போனதாக அவர் கூறினார்.

அந்த ஆடவர் எப்படி கடலில் விழுந்தார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என்றும் அது கூறியுள்ளது.

பின்னர் அங்கு வந்த SCDF வீரர்கள், அவரை சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் அந்த நபர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாக லியான்ஹே வான்பாவோ தெரிவித்தது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வரும் முன் செய்ய வேண்டியவை என்ன? – ICA அப்டேட்