சிங்கப்பூர் Botanic பூங்காவில் உள்ள ஏரி வறண்டு கொண்டே செல்லும் அவலம்!

Singapore Botanic Gardens lake drying up, likely because July & August 2019 way too hot!

சிங்கப்பூரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய வெப்பத்தின் காரணமாக சிங்கப்பூர் Botanic பூங்காவில் உள்ள ஏரி வறண்ட நிலையில் காணப்படுகிறது.

1869 ஆண்டு முதல் பதிவாகியுள்ள வானிலை பதிவின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் மிகவும் வறட்சி காணப்பட்டதாக, சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், வெப்பநிலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. தினசரி வெப்பநிலை அதிகபட்சமாக 34.7ºC -ஐ எட்டி வருகிறது.

சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் உள்ள ஏரி பொதுவாக தாவரங்கள் செழித்து, வனவிலங்குகளுடன் அழகாக காட்சியளிக்கும்.

ஆனால், தற்போது ஏரி கறைகள் வறண்டு போய்விட்டது. மீன் மற்றும் ஸ்வான்ஸ் போன்ற வன விலங்குகளுக்கு என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதுபோன்ற இன்னும் பல ஏரிகள் வறண்டு கொண்டே போகிறது. இந்த நிலைமை இனி தொடர்ந்து சிங்கப்பூர் எதிர்காலத்தில் சந்திக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.