சிங்கப்பூரில் மேலும் எட்டு புதிய நபர்கள் உறுதி; அனைவரும் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள்..!

COVID-19 என்னும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட புதிய 8 சம்பவங்களை சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (பிப்ரவரி 13) உறுதிப்படுத்தியுள்ளது, இவை அனைத்தும் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 58 ஆகக் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (Covid-19); பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் முழு செலவை ஏற்கும் சிங்கப்பூர் அரசு..!

பிப்ரவரி 13 நிலவரப்படி, 15 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட 43 பேர் மருத்துவமனையில் சீரான உடல்நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிதாக வைரஸ் தொற்று பாதித்த எட்டுப் பேரில் ஐந்து பேர் ‘தி கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புைடயவர்கள்.

அவர்களுள் ஒருவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 54 வயதுப் பேராசிரியர், மற்றவர்கள் 26, 48, 58 வயதுள்ள ஆடவர்கள் மற்றும் இன்னொருவர் 54 வயது நிரம்பிய பெண்மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருவர் ‘சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ்’ கட்டுமானத் தளத்துடன் தொடர்புைடயவர்கள்.

மேலும் ஒருவர், பிப்ரவரி 12 அன்று உறுதிசெய்யப்பட்ட DBS வங்கி ஊழியரின் குடும்ப உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் தற்போது தேசிய தொற்றுநோய்கள் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் புதிய 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கும் கிராப்..!