சிங்கப்பூரில் வாகனங்களைத் சுத்தியலை வைத்து தாக்கும் முதியவர் – காணொளி..!

Elderly man arrested after using hammer to hit passing vehicles

சிங்கப்பூரில் கடந்து செல்லும் வாகனங்களைத் சுத்தியலைப் பயன்படுத்தி தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “கடந்து செல்லும் வாகனங்களைத் தாக்க சுத்தியலைப் பயன்படுத்திய ஒரு முதியவர் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம், பெடோக் வடக்கு சாலையில் (Bedok North Road) நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான காணொளியில், அந்த நபர் சாலையின் நடுவே வெறுங்காலுடன் அங்கும் இங்கும் செல்வதைக் காட்டுகிறது.

மேலும், அவர் கடந்து செல்லும் லாரியின் முன்புறத்தை சுத்தியலால் அடிப்பதும், லாரி சென்ற சிறிது நேரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை பாய்ந்து மடக்கி பிடிப்பதும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

Nov2019Mentally unsound Man taking a hammer hitting oncoming vehicles who pass by him. He was subsequently pin down and arrested by the police.Well done! ??????????

Posted by SG Road Vigilante – SGRV on Wednesday, November 27, 2019

66 வயதான அவர் மீது வியாழக்கிழமை இன்று, உயிருக்கு ஆபத்து அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. மேலும் காவல்துறை, மனநலப் பரிசோதனைக்காக அவரை மனநல மருத்துவமனையில் வைக்கத்திட்டமிட்டுள்ளது.