COVID-19: சிங்கப்பூரில் போலீஸ் அறிவுரையை கேட்க மறுத்த முதியவர்; தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டதால் கைது..!

Elderly man who wanted to eat at void deck arrested after refusing to go home, shouting at police
Elderly man who wanted to eat at void deck arrested after refusing to go home, shouting at police (Photo: Stomp)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியார் மற்றும் பொது இடங்களில் எந்தவொரு சமூக கூட்டங்களையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொது மற்றும் தனியார் இடங்களில் ஒன்றுக்கூடத் தடை; மீறுவோருக்கு சிறை, அபராதம்..!

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 7), பிளாக் 28 பெண்டிமீர் சாலையில் வயதான நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனையை கேட்க மறுத்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வெற்றுத் தளங்களில் (Void deck) உள்ள மேசையில் சாப்பிட விரும்பியதாகவும், மேலும் அங்கிருந்து வெளியேற மறுத்ததாகவும் காவல்துறை ஸ்டாம்பிடம் தெரிவித்தனர்.

இது பற்றி வெளியான காணொளியில், 71 வயதான நபர், பையில் உணவுப் பொருளை வைத்துள்ளதையும், மேலும் அவர் கைவிலங்கிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

https://www.facebook.com/xiaofu.lin.75/videos/2934361733289207/?t=27

அன்று காலை 11.40 மணியளவில் அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெற்று தளத்தில் இரண்டு மேசைகளைச் சுற்றி வயதான ஒரு குழு இருந்ததை அவர்கள் சந்தித்தனர்.

அதை தொடர்ந்து, அந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று அவர்களை வீட்டிற்குச் செல்லும்படி காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அந்த குழு வெளியேறியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, 71 வயதான அந்த முதியவர் மதிய உணவுடன் வந்து ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிட விரும்பினார். அதிகாரிகள் அவரை வீட்டிற்குத் திரும்பும்படியும், மேலும் தேவையின்றி பொது இடத்தில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால், அந்த நபர் அதிகாரிகளின் ஆலோசனையை கேட்க மறுத்து அவர்களிடம் சச்சரவில் ஈடுபட்டார். இருப்பினும் அதிகாரிகள், அவரை அமைதியாக இருக்கும்படியும், அந்த இடத்தை விட்டு வெளியேற பலமுறை அறிவுறுத்திய போதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும், போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். COVID-19 தொற்றுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் திறம்பட செயல்முறைப்படுத்த அனைவரும் தங்கள் பங்கை வகிக்க வேண்டும், என்று காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 106 பேருக்கு தொற்று உறுதி..!