சிங்கப்பூரில் வயதான வாடிக்கையாளர்கள் மால் எஸ்கலேட்டரில் விழுந்து விபத்து..!

Elderly shoppers hurt after fall on escalator in Northpoint City mall (PHOTO: SHIN MIN DAILY NEWS)

வயதான மூன்று வாடிக்கையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) நார்த் பாயிண்ட் சிட்டி மாலில் உள்ள எஸ்கலேட்டரில் சென்றபோது எதிர்பாராத விதமாக விழுந்தனர்.

இதனை அடுத்து, பொதுமக்கள் எஸ்கலேட்டரை நிறுத்தியதாக, மால் செய்தித் தொடர்பாளர் தி நியூ பேப்பரிடம்  (THE NEW PAPER) திங்கள்கிழமை நேற்று இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் இருவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதில் காயங்கள் சிறிய அளவில் ஏற்பட்டதாகவும் TNP தெரிவிக்கின்றது.

மாலை 5.30 மணியளவில் நார்த் பாயிண்ட் சிட்டியின் சவுத் விங்கில் மேல்நோக்கி சென்ற எஸ்கலேட்டரில் ஷாப்பிங் வந்த மூன்று வயதான வாடிக்கையாளர்கள் விழுந்து காயமடைந்துள்ளனர், என்று மால் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பி.சி.ஏ தனது இணையதளத்தில், “எஸ்கலேட்டர் பாதுகாப்பு பொறுப்பு என்பது அனைவரிடமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எஸ்கலேட்டர் உரிமையாளர்கள் மற்றும் எஸ்கலேட்டர் ஒப்பந்தக்காரர்கள் தங்களது எஸ்கலேட்டர்கள் நடைமுறையில் உள்ள தரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

“எஸ்கலேட்டர் பயன்படுத்துவோரும் சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதில் தங்களின் பங்கைக் கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.