சிங்கப்பூரில் மின் கட்டணங்கள் உயருகிறது – SP குழுமம் அறிவிப்பு!

சிங்கப்பூரில் வரும் ஜூலை – செப்டம்பர் கால மின் கட்டணங்கள் அதிகரிக்கும், என SP குழுமம் தெரிவித்துள்ளது.

வருகின்ற ‘ஜூலை 1 – செப்டம்பர் 30’ கால அளவில் கிலோவாட் வீதம் சராசரியாக 6.4 அல்லது 1.43 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்கள் அறிக்கையின் படி, தற்போதைய மின் கட்டணங்கள் அதிகரிப்பு, 2014 அக்டோபர் – டிசம்பர் கால மின் கட்டணங்களை விட மிக அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

7 % GST தள்ளுபடியில், மின் கட்டணம் 22.79 % இருந்து 24.22 % வரை கிலோ வாட் வீதம் அதிகரித்துள்ளது. 4 அறைகள் கொண்ட HDB குடியிருப்புகளுக்கு மாத மின் கட்டணம் சராசரியாக $5.20 வெள்ளி (GST க்கு முன்) அதிகரிக்கும் என SP குழுமம் தெரிவித்துள்ளது.