சிங்கப்பூரில் வரும் ஆண்டில் மின்சார கட்டணங்கள் உயர்வு – எஸ்பி குழுமம்..!

Electricity tariffs to rise 3.5% in first quarter of 2020 to hit highest rate in more than five years

வரும் 2020ம் ஆண்டு, முதற்காலண்டில் மின்சார கட்டணங்கள் சராசரியாக 3.5 சதவீதம் உயரும் என்று எஸ்பி குழுமம் திங்கள்கிழமை இன்று (டிசம்பர் 30) ​​தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை, மின் கட்டணம் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு (kwh) 0.81 சென்ட்ஸ் அதிகரிக்கும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர்த்து, இது எஸ்பி குழுமத்தால் இயங்கும் வீடுகளுக்கு, kwh 23.43 சென்ட்ஸ்லிருந்து kwh 24.24 சென்ட்ஸ்களாக உயர்ந்துள்ளது.

மேலும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், எரிசக்தி செலவு அதிகரிப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி தவிர்த்து, நான்கு அறைகள் கொண்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின் கட்டணம் $2.76 ஆக உயரும்.