வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்துகளில் ஊழியர்கள் சிலர் கைகள், விரல்களை இழந்தனர்..!

(PHOTO: Medium)

வேலையிடங்களில் நடந்த விபத்துகள் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 46 ஊழியர்கள் தங்களின் கைகள் மற்றும் விரல்களை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது .

இயந்திரங்களை கையாளுவதில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிக்காததால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வந்த 11 work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று

ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றில் அதிக தாக்கத்தை உண்டாக்கும் இது போன்ற விபத்துகள் தடுக்கப்படக்கூடியவையே என்று மனிதவள மூத்த அமைச்சர் ஸாக்கி முகம்மது வலியுறுத்தியுள்ளார்.

“சேஃப் ஹேன்ட்” என்னும் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்தின் இயக்கத்தை தொடக்கி வைத்தபோது, இது போன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு முயற்சிகளை முடிக்கிவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயந்திரப் பயன்பாட்டின் போது 1,756 ஊழியர்கள் சென்ற ஆண்டில் பாதிக்கப்பட்டதாகவும் இது 2019யை காட்டிலும் குறைவு என்றும் திரு ஸாக்கி கூறியுள்ளார்.

கடந்த மாதம் மட்டும் வெவ்வேறு பணியிடங்களில் ஏற்பட்ட விபத்துகளால் சுமார் 11 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் சில விபத்துகள் ஃபோர்க் லிஃப்ட் போன்ற இயந்திரங்கள் பயன்பாட்டின்போது நடந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய செயலில் இறங்க வேண்டும் என்றும் இந்த பொறுப்பை நிறுவனங்களே நடத்தவேண்டும் என்றும் திரு ஸாக்கி கூறியுள்ளார்.

விபத்தோ ஒருவரின் உயிரோ, இழப்பு அதிகம்தான் என்றும் மனிதவள மூத்த அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

பிரதமர் லீ மீது அவதூறு வழக்கு.. S$133,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!