சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தமிழக ஊழியர்கள், ஏஜென்சிகளுக்கு அதிக பணம் செலுத்துவதால் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

தனது குடும்ப வறுமையைப் போக்கி, தமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், சிங்கப்பூருக்குள் அடியெடுத்து வைக்கும் அநேகமானோர் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர்களே.

இவ்வாறு பல காரணங்களோடும், கனவுகளோடும் தமிழகத்தை சேர்ந்த
இளைஞர்கள் சிங்கப்பூரில் தன்னுடைய வெளிநாட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் செய்துள்ள ஏற்பாடுகள்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், கல்வியில் சரியாக தேர்ச்சி பெறாதவர்கள் என பலபேர் சிங்கப்பூரில் தமது வாழ்வாதாரத்திற்காக நீண்ட காலமாக வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் சிங்கப்பூரிலேயே பணிபுரிய விரும்புகின்றனர். இருப்பினும் இவர்கள் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்கு அதிகப்படியான தொகையை ஏஜென்சிகளுக்கு செலுத்தியே வேலை பெறுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலைப் பெறுபவர்கள் கிட்டத்தட்ட இந்தியப் பணம் ரூபாய் 4 லட்சம் வரை செலுத்தியே பெறுகின்றனர்.

இவ்வாறு வேலை பெற்றவுடன் முதலில் 2 வருட வேலைக்கான ஒப்பந்தமே முதலில் கையெழுதிடப் படுகிறது.

பலபேர் ஏஜென்சிகளுக்கான, இப்பெரும் தொகையை செலுத்துவதற்காக வட்டிக்கு அல்லது கடனாக பணம் வாங்குகின்றனர். சிலர் இப்படி அதிகமான கடன் வாங்கத் தயங்குகின்றனர்.

இவ்வாறு பணத்தை வட்டிக்கு அல்லது கடனாக வாங்கி ஏஜென்சிகளுக்கு செலுத்தி சிங்கப்பூரில் வேலை செய்தாலும், எல்லா நிறுவனங்களும் ஒழுங்கான சம்பளத்தை வழங்குவதில்லை.

சில நிறுவனங்கள் நியாயமான சம்பளத்தை வழங்கிவிட்டு மீண்டும் அதில் ஒரு தொகையை திருப்பி வாங்கிக் கொள்வதாக பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சரியாக சம்பளம் கிடைக்காமலும், அதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தமிழக ஊழியர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஏஜென்சிக்கு செலுத்திய பணத்திற்கான கடனை செலுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு மேலாக உழைக்க வேண்டியிருக்கிறது.

குடும்பத்தின் தேவைகளுக்கு மற்றும் தமது தேவைகளுக்கு என்று சம்பாதிக்கும் பணம் போதாமல் போய்விடுவதாகவும் ஊழியர்கள் கவலையுடன் கூறினார்கள்.

இதனால் தங்களுக்கு என்று எந்த சேமிப்பையும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பலர் தாயகம் திரும்பாமல் தொடர்ந்து சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு காரணம், சிங்கப்பூர் வருவதற்காக வாங்கிய கடனை கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருப்பதே என்று தெரிவித்தனர்.

இலங்கையை சேர்ந்த கட்டுமான ஊழியர்களில் சிலர் கூறுகையில் கட்டுமான துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு நிம்மதியாக உறங்கக் கூட நேரமில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால் இந்த நெருக்கடியான நிலை எல்லோருக்குமானதல்ல. சில நிறுவனங்கள் நல்ல சம்பளம் வழங்குவதாகவும், நியாயமாக நடப்பதாகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

​​ஐந்து கார்கள் மோதி விபத்து – இரண்டு பேர் மருத்துவமனையில்…