ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் – மனிதவள அமைச்சகம்..!

workers retrenchment

இந்த COVID-19 தொற்றுநோய் சூழலில், ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டால் முதலாளிகள் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப பணிநீக்க சலுகைகளை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை (மே 20) தெரிவித்துள்ளது.

மேலும் தங்கள் ஊழியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சவரக்கருவி வாங்க சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு அபராதம்..!

மேலும், ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியபோது, அவர்களிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட அனுகூலங்களை நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இவற்றை ஊழியர்கள் பணிபுரிந்த வருடங்களை கணக்கில் கொண்டு முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சங்கங்களோடு கலந்து ஆலோசித்து நியாயமான அனுகூலங்களை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும்.

சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஆதரவுத் திட்டங்களுக்குப் பின்பும், நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமற்போகலாம் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

பணிநீக்க நடைமுறைப்படுத்தும்போது, S$2,300 குறைவான மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடம் அதிகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுமாறு MOM முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குறைந்த ஊதிய ஊழியர்களின் வாழ்வாதாரங்களில் இந்த பணிநீக்க நடவடிக்கையின் தாக்கத்தையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், முதலாளிகள் தங்கள் ஊழியர்களை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதி செய்ய நினைவூட்டப்படுவதாக MOM தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!