சிங்கப்பூர் செய்திகள்

ஊழியர்களை மருத்துவ சோதனைக்கு அனுப்பத் தவறிய 2 முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து..!

Work pass privileges employers suspended
(PHOTO: Reuters)

COVID-19 தொற்றுக்கான கட்டாய வழக்கமான சோதனைக்கு தங்கள் ஊழியர்களை அனுப்பத் தவறிய, இரண்டு முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகளை மனிதவள அமைச்சகம் (MOM) ரத்துசெய்துள்ளது.

முதலாளிகள், இதற்கான சரியான காரணங்களை வழங்கவில்லை அல்லது தங்கள் ஊழியர்களுக்கு விலக்கு கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று MOM, கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) ஆகியவற்றின் கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் சுமார் 450,000 பேருக்கு தொடர்பு-தடம் கண்டறியும் கருவிகள்..!

இந்த தவறுக்கு, இனி அந்த இரண்டு வேலை அனுமதி (work pass) வைத்திருப்பவர்களை அந்த முதலாளிகள் தொடர்ந்து பணியில் அமர்த்த முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த மீறலுக்கு உடந்தையாக இல்லாததால், மாற்று வேலைகளை தேடுவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

COVID-19 கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும், வழக்கமான சோதனை நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறியதற்காக முதலாளிகளுக்கு தண்டனைகள் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஏறக்குறைய 260,000 ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது பட்டியலிடப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இருப்பினும், சோதனைக்கு உட்படுத்த வேண்டிய சுமார் 2,200 ஊழியர்கள் இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உரிய வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 12 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts