சிங்கப்பூரில் EP அனுமதி, S Pass அனுமதிக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு விவரங்கள்..!

Minimum qualifying salary for EP to be raised to S$4,500 from Sep. 1, 2020: Josephine Teo
(Photo: CNA/YouTube, Wikipedia Commons)

வேலைவாய்ப்பு அனுமதி (EP) மற்றும் S PASS சம்பள அளவுகோல்களை அரசாங்கம் உயர்த்தும் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ (ஆகஸ்ட் 26) தெரிவித்திருந்தார்.

தற்போது உள்ள அளவுகோல்களில் படி, ​​வேலைவாய்ப்பு அனுமதியில் (EP) இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் S$3,900 சம்பளமும், அதே நேரத்தில் S Pass வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் S$2,400 சம்பளமும் பெற வேண்டும்.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லையென அறிவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் ஏற்பட காரணம்..?

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் கொள்கையில் மனிதவள அமைச்சு (MOM) மாற்றங்களை அறிவித்துள்ளது. அனைத்து தொழில்துறைகளிலும் குறைந்தபட்ச சம்பளம் அளவு உயர்த்தப்படும். குறிப்பாக நிதித்துறையில் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அனுமதி (EP):

வரும் செப்டம்பர் முதல், புதிய வேலைவாய்ப்பு அனுமதி (EP) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச தகுதி சம்பளம் S$600 அதிகரிக்கப்பட்டு S$4,500ஆக உயர்த்தப்படும். இந்த ஆண்டு இரண்டாவது அதிகரிப்பு இதுவாகும்.

கடந்த மே மாதத்தில், புதிய வேலைவாய்ப்பு அனுமதி வைத்திருப்பவர்களுக்கான சம்பளஅளவுகோல்கள் S$300 அதிகரிப்பட்டு S$3,900ஆக உயர்த்தப்பட்டது.

நிதித்துறைகளில் தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் S$3,900 – இது 2020 டிசம்பர் மாதம் முதல் S$5,000ஆக உயர்த்தப்படும்.

குறைந்தபட்ச சம்பளம் வயது, அனுபவத்தைப் பொறுத்து அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை, அனுமதிகளைப் புதுப்பிப்பவர்களுக்குப் அடுத்த 2021ஆம் ஆண்டு மே 1 முதல் நடப்புக்கு வரும்.

S Pass அனுமதி:

வரும் அக்டோபர் முதல், புதிய S Pass விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதி சம்பளமும் S$100 அதிகரிக்கப்பட்டு S$ 2,500ஆக உயர்த்தப்படும்.

இந்த அனுமதிகளைப் புதுப்பிக்கும் S Pass விண்ணப்பதாரர்களுக்கு மே 1, 2021 முதல் புதிய நடைமுறை பொருந்தும்.

மேலும், தீர்வை மற்றும் இட ஒதுக்கீடுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க : கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சோதனை செய்ய திட்டம் – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg