சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம்..!

ensuring the safety of foreign workers
(Photo: ROSLAN RAHMAN/AFP via Getty Images)

சிங்கப்பூரில் அண்மை வாரங்களாக, COVID-19 கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் விடுதி உரிமையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : அண்மை வாரங்களாக, தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் புதிய பரவல்..!

அதாவது, ஊழியர்களின் மத்தியில் கிருமிப்பரவலை தடுக்க அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அதற்கான வழிகள் ஆராயப்படுகின்றன.

அதே போல சில தங்கும் விடுதிகளில் உள்ள பயன்பாடற்ற இடங்கள், பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மண்டாயில் உள்ள Westlite தங்கும் விடுதியில் கிருமி இல்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, முடிதிருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊழியர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருள் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அந்த சேவைகளைப் பெற முன்பதிவு கட்டாயம், ஊழியர்கள் மத்தியில் கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க இந்த முன்பதிவு உதவிபுரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதில், 51 அட்மிரால்டி ரோடு வெஸ்ட்டில் உள்ள Cochrane Lodge 1, 460 Mandai ரோட்டில் உள்ள Mandai Lodge 1 மற்றும் 1 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 12இல் உள்ள துவாஸ் சவுத் தங்கும் விடுதி ஆகியவற்றில் புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பறவைகளுக்கு உணவு அளிப்போருக்கு கடுமையான அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…