புதிய வருகை தடை – வெளிநாட்டு ஊழியர்கள் தட்டுப்பாட்டை கடுமையாகும்

(Photo: Today)

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முதல், நீண்டகாலம் நாட்டில் தங்கும் அனுமதி பெற்றவர்களும், குறுகியகால அனுமதியுடன் வருகை தருபவர்களும் குறிப்பிட்ட தேதிக்குள் இந்தியா சென்றிருந்தால் சிங்கப்பூர் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் விளைவாக கட்டுமானம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான நிறுவனங்களுக்கு இருப்பதை காட்டிலும் மேலும் ஊழியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

துவாஸ் விபத்தில் உயிரிழந்த தமிழர் உட்பட அனைவருக்கும் நன்கொடை பகிர்ந்தளிப்பு

மேலும், இதே போன்று தடை பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இம்மாத தொடக்கம் முதல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று சென்ற வருடம் ஏற்பட்ட கோவிட்-19 தோற்று பரவலால் தோட்டக்கலை மற்றும் கட்டுமானம் தொடர்பான வேலைகளுக்கு ஊழியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது போன்று, இந்த வருடமும் நிகழ்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு நிறுவனங்கள் உள்ளாகியுள்ளன.

சீனா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து ஊழியர்களை அழைத்துவர திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கான, செலவுகள் அதிகரிக்கும் என்பதால் முயற்சிகள் தொடங்குவதில் சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தோட்டக்கலை துறை சங்கத்தின் தலைவர் கோ எங் லாம் கூறுகையில், தற்சமயம் பணியில் உள்ள ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்கும் சூழல் உண்டாகி உள்ளது.

சுகாதாரம் மற்றும் இதர அத்தியாவசியமான பணிகளை மட்டுமே தொடருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இவ்வாறு ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதால் சோர்வடைந்து வேளையில் தொய்வு ஏற்படலாம் என்றும் மேலும் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

விமானங்களை விற்றும், குத்தகைக்கு விட்டும் நிதி ஈட்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்