சிங்கப்பூர் சுற்றுச்சூழல் சேவை துறையில் 350க்கும் அதிகமான வேலைவாய்ப்பு!

Last June Month have 92,100 new Job Offers

சிங்கப்பூரில் ஹொங் கா நார்த் (Hong Kah North) சமூக மன்றத்தில் சுற்றுச்சூழல் சேவை துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.

சுமார் 21 நிறு­வ­னங்கள் 350க்கும் அதிகமான வேலைகளை வழங்குவதாகவும், இந்த கண்காட்சி நாளையுடன் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 4 ஆடவர்கள் சம்பந்தப்பட்ட சண்டை காணொளி: உண்மையை வெளியிட்ட ஆடவர்

இதில் நிபு­ணர்­கள், மேலாளர், நிர்­வா­கி­கள், தொழிற்நுட்ப வல்லுநர்கள் (PMET) ஆகியோருக்கு 20 சதவீத வேலைவாய்ப்புகள் அடங்கும்.

வளர்ச்சி அடைந்ததாக அடையாளம் காணப்பட்ட துறைகளில் இந்த சுற்றுசூழல் துறையும் ஒன்று என்று சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (Dr Amy Khor) தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், இந்த கிருமித்தொற்று சூழலில் பலர் தங்களின் வேலை நிலவரம் குறித்த கவலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சியின் உதவியுடன் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு விதி மீறியதன் தொடர்பில் 46 பேர் மீது விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…